News March 1, 2026
காஞ்சிபுரம்: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

காஞ்சிபுரம் மக்களே, கேஸ் புக்கிங்கில் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC & OTP கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. e-KYC இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது. பாரத் கேஸ் : https://www.ebharatgas.com, இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in, ஹெச்.பி: https://myhpgas.in கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. ஷேர் பண்ணுங்க
Similar News
News March 2, 2026
காஞ்சிபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், சக்கரபாணி நகரைச் சேர்ந்தவர் கோபி(44). இவரது மகன் ஆதித்யா(17), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு வீட்டில் உள்ள அறைக்கு சென்ற ஆதித்யா, நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. ஜன்னல் வழியாக பார்த்த போது, அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 2, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 01) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 1, 2026
காஞ்சி: அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.


