News August 31, 2025

காஞ்சிபுரம்: குழந்தை வரம் அருளும் முக்கிய தலம்!

image

காஞ்சிபுரம், திருப்புட்குழியில் விஜயராகவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இத்தலத்துக்கு வந்து ஜடாயு தீர்த்தத்தில் நீராடி இரவில் வறுத்த பயிறை மடியில் கட்டிக் கொண்டு வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 1, 2025

காஞ்சிபுரம் இட்லியின் சிறப்பு தெரியுமா..?

image

மற்ற இட்லியை விட காஞ்சிபுரம் இட்லி முற்றிலும் வித்தியாசமானது. பல்லவர்கள் காலத்திலிருந்தே காஞ்சிபுரம் கோயில்களில் வழங்கப்பட்ட இந்த இட்லியின் சிறப்பம்சம் இதில் சேர்க்கப்படும் பொருள்களும் அதன் தயாரிப்பு முறையும் தான். நீளமான உருளை வடிவ மூங்கில் அச்சினுள் மந்தாரை இலையைப் பரப்பி, அரிசி, உளுந்து, சீரகம், வெந்தயம், மிளகு போன்ற பொருள்கள் சேர்த்து அரைக்கப்பட்ட மாவை ஊற்றி, வேகவைப்பது தான் காஞ்சிபுரம் இட்லி.

News September 1, 2025

காஞ்சி ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

நேற்று ஆகஸ்ட் 31 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில்; தமிழக சமூகநலத்துறை சார்பில் பெண் குழந்தைகளின் சமூகம் முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து நவம்பர் 20 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 1, 2025

காஞ்சிபுரம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.1) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு நேரடியாக மக்களின் குறைகளை மனுவாக பெற உள்ளார். இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்து பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!