News January 2, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை(ஜன.3) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

Similar News

News January 7, 2026

காஞ்சி: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

image

காஞ்சிபுரம் மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு க்ளிக் செய்து மேரா ரேஷன் செயலியில் ரேஷன் எண் மற்றும் ஆதார் எண் பதிவு பண்ணுங்க.. அதில் PHH, AAY வந்தால் ரூ.3000 கன்பார்ம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 7, 2026

மதுார் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (ஜன.08) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 09:00 மணி முதல் மதியம் 03:00 மணி வரை கீழ் கண்ட இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. மதுார், அருங்குன்றம், சித்தாலபாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூர், பாலுார், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம், வாலாஜாபாத், கிதிரிபேட்டை, புத்தகரம், கீழ்ஒட்டிவாக்கம், வெண்குடி.

News January 7, 2026

குன்றத்தூர்: குடும்பத் தகராறால் நிகழ்ந்த கோரம்

image

குன்றத்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தையல் தொழிலாளி புருஷோத்தமன் (44), மதுப்பழக்கத்தால் வேலைக்குச் செல்லாததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, புருஷோத்தமன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!