News March 28, 2024
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது தொடர்ந்து பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட பேச்சு வேட்பாளர்கள் மொத்தம் 51 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் அதில் 13 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் மீதம் உள்ள வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டதாக காஞ்சிபுரம் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கலைச்செல்வி அறிவித்தார்.
Similar News
News April 16, 2025
மதிய உணவு சாப்பிட்ட 39 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

உத்திரமேரூர், ஓங்கூர் கிராமத்தில் உள்ள ஆர்.சி., தொடக்கப் பள்ளியில் 39 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு, சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சத்துணவு அமைப்பாளர் பாக்கியலட்சுமி, சமையலர் மேரி ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.
News April 15, 2025
மாங்காய் பறிக்க சென்றவர் கீழே விழுந்தது உயிரிழப்பு

ஒரகடம், சென்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரன் (33), வல்லம் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை அதே பகுதி விளையாட்டு திடலில் மாங்காய் பறிக்க சென்றுள்ளார். மரத்தில் இருந்து விழுந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 15, 2025
டிகிரி இருந்தால் போதும்; மெட்ராஸ் ஐகோர்டில் வேலை

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <