News November 16, 2024
காஞ்சிபுரம் கபடி வீரர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்ட கபடி கழகம் சார்பில், வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நாளை (நவ.17) கொளப்பாக்கம் அரசு பள்ளியில் நடைபெறும் இத்தேர்வில், கலந்து கொள்ளும் வீரர்கள் 20 வயதுக்கு உட்பட்டும் 70 கிலோவிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில கபடி போட்டியில் கலந்து கொள்வார்கள். வீரர்களின் கபடி குழுக்கள் காஞ்சிபுரம் மாவட்ட கபடி கழகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
Similar News
News March 2, 2026
குன்றத்தூரில் பயங்கர தீ விபத்து!

காஞ்சிபுரம்: குன்றத்தூரைச் சேர்ந்தவர் ஆனந்த்(36). இவர் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையோரம் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை கடை தீப் பிடித்து பயங்கரமாக எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.
News March 2, 2026
காஞ்சிபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை!

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், சக்கரபாணி நகரைச் சேர்ந்தவர் கோபி(44). இவரது மகன் ஆதித்யா(17), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு வீட்டில் உள்ள அறைக்கு சென்ற ஆதித்யா, நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. ஜன்னல் வழியாக பார்த்த போது, அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 2, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 01) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


