News December 24, 2025

காஞ்சிபுரம்: உடல் நசுங்கி கொடூர பலி!

image

குன்றத்தூர் தெற்கு மலையம்பாக்கம் என்.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (55). விவசாயியான இவர், நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செட்டி பேடு என்னும் இடத்தில் பின்னால் வந்த லாரி தாமோதரன் வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தாமோதரன் உடல் நசுக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

Similar News

News December 25, 2025

காஞ்சிபுரம்: தொழிற்சாலை ஊழியர் மர்ம சாவு!

image

திருப்போரூர்: வேம்படி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ்(50). இவர், ஆலத்தூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணியில் இருந்த போது மூச்சிட் திணறல் ஏற்பட்டு மயங்கு விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 25, 2025

காஞ்சி: மூதாட்டியை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்!

image

உத்திரமேரூர் அடுத்த கோழியாளம் கிராமத்தில் வசிப்பவர் அசோக்(20). இவர், 65 வயது மூதாட்டியின் விவசாய நிலத்தில் நெல் மூட்டைகளை அடுக்குவதற்காக சென்றார். அப்போது அந்த மூதாட்டியிடம் ’உல்லாசமாக இருக்கலாம்..’ என அழைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மூதாட்டி அளித்த புகாரின் பேரில் உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

News December 25, 2025

காஞ்சிபுரம்: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

image

தைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(28). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று(டிச.24) அதே கிராமத்தில் உள்ள ஜெயலட்சுமி என்பவரின் வீட்டில் வேலை செய்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!