News February 20, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (பிப்.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 20, 2026
காஞ்சிபுரம்: ஏடிஎம்-யில் அட்டூழியம்!

ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகை பகுதி வண்டலூர் – வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் உள்ளது. நேற்று(பிப்.19) அதிகாலை பணம் எடுப்பது போல் அங்கு வந்த மர்ம நபர்கள் மண்வெட்டி மற்றும் கற்கள் மூலம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது, எச்சரிக்கை அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலி எழுப்பியது. உடனே, அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 20, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அமேசான் நிறுவனத்தின் இலவச செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சியில் சேர மாவட்ட ஆட்சியர் நேற்று(பிப்.19) அழைப்பு விடுத்துள்ளார். தகுதியுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பித்து வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 20, 2026
காஞ்சிபுரத்தில் அதிரடி கைது!

ஒரகடம் அடுத்த சென்னகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி(33). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த போலீஸ் விசாரணையில் வெங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக்(26), முகேஷ்(23), மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.


