News October 14, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரத்தில் இன்று (அக்.13 ) இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News October 14, 2025

காஞ்சியில் மர்ம காய்ச்சலில் பலியான சிறுமி

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 32 வது வார்டு பகுதியில் உள்ள ஏகேடி தெரு பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பவரின் இளைய மகள் கார்த்திகா. கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திடீர் மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக பெற்றோர்கள் தெரிவித்ததால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

News October 13, 2025

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் யோகிபாபு தரிசனம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சக்தி பீடங்களில் முதன்மையாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். நடிகருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பும், சிறப்பு தீபாராதனை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது, ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

News October 13, 2025

காஞ்சிபுரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் மூன்றாம் கட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நாளை (14.10.2025) காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர் நகராட்சி, திருப்பெரும்புதூர், வாலாஜாபாத் மற்றும் குன்றத்தூர் நகரப் பஞ்சாயத்து பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் தங்கள் குறைகளை ஆவணங்களுடன் மனுக்கள் அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!