News December 30, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டம் நேற்று (29.12.2025) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்
Similar News
News January 2, 2026
காஞ்சிபுரம்: எந்திரத்தில் தலை சிக்கி கொடூர பலி!

உத்திரமேரூர் ஒன்றியம் ரெட்ட மங்கலம் கிஉராமத்தில் டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாய்னர் அபின்(19) என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு 7:30 மணிக்கு எந்திரத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக ஜாய்னரின் தலை அதில் சிக்கி, கொடூரமாக பலியானார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 2, 2026
காஞ்சிபுரம்: விபத்தில் துடிதுடித்து பலி!

சந்தவேலூர் கிராமம், குண்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாமலாவலா ஆப்பிள்(48). இவரது மனைவி சங்கீதா, மகன் ஆதியுடன் பைக்கில் வாலாஜாபாத் சென்றுவிட்டு மீண்டும் சுங்குவார்சத்திரம் நோக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில் ஜாமலாவாலா ஆப்பிள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகனும், மனைவியும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 2, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.01) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


