News October 8, 2025
காஞ்சிபுரம் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இரவு நேர ரோந்து பணிக்கு நேற்று (அக்.07) இரவு முதல் இன்று காலை (அக்.08) 6 மணி வரை ரோந்து பணிக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.
Similar News
News October 8, 2025
காஞ்சிபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஆர்டிஇ அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் சேர்க்கை நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது குழந்தைகள் நுழைவு நிலை வகுப்பில் கல்வி பயிலும் அதே பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான சேர்க்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே சேர்க்கப்பட்ட தகுதியான மாணவர்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்வதற்கான 10 நாள்கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 7, 2025
குன்றத்தூரில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் வெங்கடேசன். அங்குள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு முடிந்து நேற்று பள்ளிக்குச் சென்ற வெங்கடேசன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளார். ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.
News October 7, 2025
காஞ்சிபுரம் நீதிபதி செம்மல் அதிரடி மாற்றம்

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக செயல்பட்டு வந்த செம்மலை அரியலூர் லோக் அதாலத் தலைவராக, பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அல்லி உத்தரவிட்டுளளார். மேலும் சென்னை மாவட்ட நீதிபதியாக செயல்பட்டு வந்த தீப்தி அறிவுநிதி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் டிஎஸ்பி-யை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது சர்ச்சையான நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.