News October 13, 2025
காஞ்சிபுரம்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

காஞ்சிபுரம் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த இணையத்தளத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கேஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 13, 2025
காஞ்சிபுரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் மூன்றாம் கட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நாளை (14.10.2025) காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர் நகராட்சி, திருப்பெரும்புதூர், வாலாஜாபாத் மற்றும் குன்றத்தூர் நகரப் பஞ்சாயத்து பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் தங்கள் குறைகளை ஆவணங்களுடன் மனுக்கள் அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
News October 13, 2025
காஞ்சியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

1)பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவில் உள்ள தனியார் மண்டபம், 2)வைத்தியலிங்கம் பேலஸ், 3)முருகன் கோயில் மெயின் ரோடு குன்றத்தூர், 4)திருப்புட்குழி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி காஞ்சிபுரம், 5)ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் வல்லம் ஸ்ரீபெரும்புதூர், 6)ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, 7)களியனூர் ஆகிய இடங்களில் நாளை (அக்.14) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. SHARE பண்ணுங்க.
News October 13, 2025
தாமல் ஏரியை ஆய்வு செய்த அமைச்சர் காந்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி தனது முழு கொள்ளளவான 18 அடியை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. தாமல் ஏரியை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன இருந்தனர்.