News November 30, 2025
காஞ்சிபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் தங்கள் பற்றிய முழுவிவரங்கள், வீர தீரச் செயல்கள் குறித்த தகவல்களை https://awards.tn.gov.in இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15-12-2025 ஆகும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
காஞ்சிபுரம் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் நள்ளிரவில் வலுவிழந்தது. இந்நிலையில் வலுவிழந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு 90 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது மதியம் வக்கீல் மேலும் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி செல்லும் குழைந்தைகள் குடை, ரெயின் கோர்ட் கொண்டு செல்லுங்கள்.
News December 1, 2025
காஞ்சிபுரம்: காணாமல் போன சிறுமிகள் போராடி மீட்பு!

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் அரசு குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 40 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகளில் 4 பேர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார்கள். புகாரின் பேரில் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்கள் சென்னையில் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து போலீசார் அவர்களை பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
News December 1, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (டிச.01) காலை வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


