News July 8, 2024

காஞ்சிபுரத்தில் 59 காலிப்பணியிடங்கள்

image

காஞ்சிபுரத்தில் 59 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்தில் 22 காலிப்பணியிடங்களும், வாலாஜாபாத் ஒன்றியத்தில்13 காலிப்பணியிடங்களும், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் 11 காலிப்பணியிடங்களும், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 8 காலிப்பணியிடங்களும், குன்றத்துார் ஒன்றியத்தில் 5 காலிப்பணியிடங்களும் உள்ளன என தெரியவந்துள்ளது.

Similar News

News September 1, 2025

காஞ்சியில் ஐஸ்வர்யத்தை அள்ளித்தரும் கள்வப்பெருமாள்!

image

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கள்வனூர் பகுதியில் கள்வப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் கள்வப்பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாருக்கு தயிர்சாத நெய்வேத்தியம் படைத்து விஷேச பூஜைகள் செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பணக் கஷ்டத்தில் வாடும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்து உதவுங்க!

News September 1, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (செப்டம்பர் 1) மக்கள் குறைத்தீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் கூட்டத்தின் நுழைவாயில் பகுதியில் தீக்குளிக்க முயற்சி செய்தார். இவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 1, 2025

காஞ்சிபுரம்: பட்டா விவரங்களை இனி வீட்டில் இருந்தே பார்க்கலாம்

image

காஞ்சிபுரம் மக்களே இனி எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பட்டா மாறுதல் விண்ணப்பிக்க, பட்டா- சிட்டா புலப்பட விவரங்களை பார்வையிட அதை சரி பார்க்க, மேலும் பட்டா விண்ணப்பித்தலின் நிலையை இந்த<> லிங்கில்<<>> சென்று இனி வீட்டில் இருந்தே பார்த்துக்கொள்ளலாம். பட்டா பற்றிய அணைத்து வகையான தகவலும் இந்த இணையத்தில் உள்ளது. இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு பகிருங்கள்

error: Content is protected !!