News August 25, 2024

காஞ்சிபுரத்தில் 2303 வீடுகளுக்கு ரூ.14 கோடி ஒதுக்கீடு

image

காஞ்சிபுரத்தில் குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், 2000 – 01ம் நிதி ஆண்டிற்கு முன், கட்டிய வீடுகளில் பெரும்பாலான வீடுகள், சுவர் விரிசல், கூரை என, பல்வேறு நிலைகளில் சேதம் ஏற்பட்டுள்ளன. இதில் 2,303 சேதமடைந்த வீடுகளை சீரமைக்க தற்போது ஊரக வளர்ச்சித்துறை நிர்வாக அனுமதி அளித்து 14 கோடி ஒதுக்கியுள்ளது.

Similar News

News August 11, 2025

காஞ்சிபுரத்தில் 10th, ITI படித்தவர்களுக்கு வேலை

image

சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையான ICF-இல் 1,010 காலி பணியிடங்கள் உள்ளன. கார்பெண்டர், பெயிண்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இன்று (ஆகஸ்ட் 11) மாலை 5.30 மணிக்குள் இந்த <>இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 11, 2025

காஞ்சிபுரத்தில் முதல் மனைவி கொடூர கொலை!

image

வாலாஜாபாத்தை சேர்ந்த மதன் தனது 2ஆவது மனைவி சுகன்யா உடன் வாழ்ந்து வந்தார். அண்மையில், முதல் மனைவி லைலா குமாரி உடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு, அவ்வப்போது சந்தித்து பேசி வந்துள்ளார். இதனால் மதன் – சுகன்யா இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. லைலா குமாரி தன்னை வசியம் செய்ததாக நினைத்து, அவரை வனப்பகுதிக்கு வரவழைத்து கொலை செய்துள்ளார். பின்னர், போலீசார் விசாரணையில் உண்மைகள் வெளிவர, சரணடைந்தார்.

News August 11, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மழை அலர்ட்

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் 16ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆக.11) பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காஞ்சிபுரம் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். மேலும், SHARE பண்ணுங்க.

error: Content is protected !!