News January 16, 2026
காஞ்சிபுரத்தில் வாடகை வீட்டுக்கு போறீங்களா? இது முக்கியம்!

காஞ்சிபுரத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!
Similar News
News February 1, 2026
காஞ்சிபுரம்: தாமிர ஒயர் திருட்டு சம்பவத்தில் 3 பேர் கைது!

உத்திரமேரூர் ஒன்றியம் சாத்தனஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் வயலில் உள்ள கிணறு பம்பு செட்டில் உள்ள தாமிர ஒயர்கள் திருடப்பட்டிருந்தது. சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் அளித்தனர். புகாரின் அடைப்படையில் சாத்தனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (20), 18 வயது சிறுவன், அத்தியூர் கிராமத்தை சேர்ந்த ரோகித் (20) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
News February 1, 2026
காஞ்சிபுரம்: தாய்மார்களுக்கு ரூ.11,000!

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.
News February 1, 2026
காஞ்சிபுரம் அருகே அதிரடி கைது!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது உப்பரி குளம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றிய கஜா, லோகநாதன், சுரேஷ் ஆகிய மூவரைப் பிடித்து விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரித்தனர். அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.


