News March 24, 2025

காஞ்சிபுரத்தில் வரலாற்று அருங்காட்சியகம்

image

சகுந்தலா ஜகந்நாதன் அருங்காட்சியகம் என்பது காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு நாட்டுப்புறக் கலை அருங்காட்சியகம் ஆகும், இது சர் சி.பி. ராமசாமி ஐயர் வாழ்ந்த 400 ஆண்டுகள் பழமையான வீட்டில் அமைந்துள்ளது. இங்கு பழங்காலப் பொருட்களான பாரம்பரிய ஓவியம், பழங்கால பாம் இலைகள், இசைக்கருவிகள், கற்சிலைகள், பாரம்பரிய உடைகள், கைத்தறி உடைகள், நகை மற்றும் உள்நாட்டு புத்தகங்கள் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 24, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரத்தில் நேற்று (செ.23) இரவு முதல் இன்று (செ.24) காலை 6 மணி வரை காஞ்சிபுரம் மாவட்டம் காவல் நிலையங்களின் ரோந்து பார்க்கும் அதிகாரிகள் விவரம் வெளியாகி உள்ளது. பொதுமக்களின் எளிய தொடர்புக்காக காவல் நிலையம் வாரியாக வெளியிடப்படுகிறது. அவசர நிலைகளில் தொடர்பு கொள்ள கீழ்க்காணும் காவல் நிலைய எண்களை பயன்படுத்தலாம். பாதுகாப்பை உறுதி செய்ய, மக்கள் நேர்மையான ஒத்துழைப்பும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஷேர் IT

News September 24, 2025

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் http://scholarships.gov.in) (National Scholarship Portal) Renewal Application என்ற இணைப்பில் (Link) சென்று OTR Number (One Time Registration) பதிவு செய்து 2025-26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பித்தினை புதுப்பித்தல் (Renewal) செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 23, 2025

பல் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் காலியாக உள்ள பரந்தூர், சமுதாய சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant) ஆகிய பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 9.10.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்

error: Content is protected !!