News April 16, 2025
காஞ்சிபுரத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை (ஏப்ரல்.17) காலை 11:00 மணிக்கு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
Similar News
News April 18, 2025
காஞ்சிபுரம்: பொன் சேர வேண்டுமா…? இங்கு போங்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருவோணக்காந்தான் தளி ஓணக்காந்தேஸ்வரர் கோயிலின் சிறப்பு இங்கே சிவன் மூன்று லிங்கங்களாக காட்சி தருகிறார்.இது தவிர மற்றொரு விநாயகரான ஓங்கார கணபதியின் சிலையில் பக்தியுடன் காது வைத்து கேட்டால் ” ஓம் ” என்ற ஒலி கேட்பதாக சொல்வதுண்டு.இந்தத் தலத்தில் பக்தி பாடல்களை பாடினால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது நம்பிக்கை. பொன் சேர்க்க நினைப்பவர்களுக்கு பகிரவும்
News April 18, 2025
காஞ்சிபுரம் ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும்போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்யேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘RAIL MADDED’ என்ற அப்ளிகேஷனை இந்த <
News April 18, 2025
கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு

காஞ்சிபுரம் மாவட்டம் காமராஜர் வீதி பின்புறம் உள்ள சேக்குபேட்டை பகுதியில், பயன்பாட்டில் இல்லாத 50 அடி ஆழம் கொண்ட தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாத இந்த கிணற்றில், நேற்று (ஏப்ரல் 17) மாலை அங்கு சுற்றித்திரிந்த நாய் ஒன்று தவறுதலாக விழுந்துவிட்டது. தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி நாயை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.