News January 20, 2026

காஞ்சிபுரத்தில் திக்குமுக்காடும் மக்கள்!

image

காஞ்சி: சேக்குபட்டியில் நாய்கள் அதிகமாக வீதியில் சுற்றுகின்றன. தாலுகா அலுவலகம், பேரூந்து நிலையம் செல்ல கவரை வழியாக செல்லவேண்டும். இந்தத் தெருவில் நாய்கள் இருப்பதால் மக்கள் பயத்துடன் வீதியை கடக்கும் நிலை உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு இந்த நாய்களால் விபத்து ஏற்படுகிறது. ஆகையால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News January 23, 2026

காஞ்சியில் அதிகாலையே பயங்கரம்!

image

காஞ்சி மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் உள்ள பிளைவுட் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால் தொழிற்சாலை முழுவதும் புகைமண்டலமானது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர். மின் கசிவு காரணமா என்பது குறித்து படப்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 23, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.22) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!