News February 19, 2025
காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள டாக்டர் பி எஸ் ஸ்ரீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வரும் பிப்.22 சனிக்கிழமை காலை 9 மணி முதல் ஒரு மணி வரை தனியார் துறை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News February 21, 2025
நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் விலகல்

நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளராக 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ராயப்பன் இன்று (பிப்.,21) நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அறிக்கையில், கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாகவும், இதுவரை உடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
News February 21, 2025
பஞ்சு கிடங்கில் தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசம்

காஞ்சிபுரம் மேட்டுத்தெரு அருகே உள்ள பள்ளிக்கூடத்தான் தெருவில் உள்ள வீடு ஒன்றின் மாடியில், கிடங்கு அமைத்து, அதில் மெத்தை தயாரிக்கும் மூலப்பொருட்களான பஞ்சு உள்ளிட்ட பொருட்களை, நுாருல்லா,50. என்பவர் நடத்தி வருகிறார். இந்த கிடங்கில், நேற்று (பிப்.20) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கின் நான்கு புறங்களிலும் தீ மளமளவென பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
News February 20, 2025
அஞ்சல் துறையில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 53 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <