News August 13, 2024
காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, அலுவலகத்தில், வரும் 16ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இதில், தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, பட்டயம் படித்தவா்கள் பங்கேற்று பயன்பெறலாம். SHARE IT
Similar News
News March 6, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அதிரடி உத்தரவு!

காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகா தலைமையில் நேற்று தேர்தல் செலவினக் கண்காணிப்புக் குறித்த மாவட்ட நுண்ணறிவுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர், தேர்தல் நேரத்தில் பணம், மது, போதைப்பொருட்கள் மற்றும் இலவசப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினருக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
News March 6, 2026
காஞ்சிபுரத்தில் பயங்கர விபத்து!

காஞ்சிபுரம்: வெள்ளகேட் பகுதியில் இருந்து பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டது. லாரியை லிங்கநாதன் (38) ஓட்டி வந்தார். படப்பை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கன்டெய்னர் லாரியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. லிங்கநாதன் உடனடியாக லாரியை நிறுத்தி உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
News March 6, 2026
காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலிசார் விவரங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.


