News January 14, 2026
காஞ்சிபுரத்தில் கேஸ் பிரச்னையா..?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், வரும் ஜனவரி 26ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சிலிண்டர் முன்பதிவு, விநியோக தாமதம் மற்றும் கூடுதல் கட்டணம் குறித்த புகார்களை பொதுமக்கள் நேரில் தெரிவித்துத் தீர்வு பெறலாம்.
Similar News
News January 22, 2026
காஞ்சிபுரத்தில் 8 கிராம் தங்கம் இலவசம்!

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News January 22, 2026
காஞ்சி: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 22, 2026
காஞ்சியில் மயங்கி விழுந்து பரிதாப பலி!

திருமுக்கூடல் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் ரமேஷ், நேற்று குருவிமலை முருகன் கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரைப் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


