News February 5, 2026

காஞ்சிபுரத்தில் கிடந்த ஆண் சடலம்!

image

மாங்காடு அடுத்த மலையம்பாக்கம், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையை ஒட்டி உள்ள காலி இடத்தில் உள்ள சிறிய பள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலுருந்து வரும் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்தத் தண்ணீரில் முதியவர் ஒருவர் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்காடு போலீசார், இறந்தவரின் விவரம், எப்படி இறந்தார்? போன்றவை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News February 19, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் அறிவுறுத்தல்!

image

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு மூன்று நாட்கள் முன்னதாக பறவை இறந்து கிடந்தது. பறவை காய்ச்சலால் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகேம் கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று(பிப்.19) மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, இறந்த பறவைகளை தாங்களாகவே அப்புறப்படுத்தாமல், கால்நடை மருத்துவ துறைக்கு தெரியப்படுத்தவும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

News February 19, 2026

காஞ்சிபுரத்தில் அதிரடி கைது!

image

ஒரகடம் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு, ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில், பண்ருட்டி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் போதை வஸ்துக்கள் கொரியர் மூலம் வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சோதனை செய்ததில், 200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தூத்துக்குடியைச் சேர்ந்த துரைசெல்வன்(27) என்பவரை கைது செய்தனர்.

News February 19, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!