News August 8, 2024

காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் மேல் வளிமண்ட சுழற்சி காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குகிறது. இதனால் வெளியே செல்லும்போது குடை, ரெயின் கோர்ட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

Similar News

News November 13, 2025

காஞ்சி: ரூ.85,920 வரை சம்பளத்தில் வங்கியில் வேலை!

image

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி (PNB), 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தது 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-23 குள் இந்த<> லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். வங்கியில் வேலை தேடும் நண்பர்களுக்கு.

News November 13, 2025

காஞ்சி: கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞன் கைது

image

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வெங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்ற இளைஞன் கிதிரிப்பேட்டை பகுதியில் உள்ள தைலன் தோப்பு பகுதியில் தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதைப்பற்றி நேற்று மதுவிலக்கு போலீசருக்கு கிடைத்த தகவலின் படி சோதனை மேல் கொண்டதில் அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

News November 13, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!