News April 20, 2025
காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

உத்திரமேரூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கருவேப்பம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் (21) என்பவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை கண்டனர். விசாரணையில் அவர் சட்டவிரோதமாக 1.2 கிலோ கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, அர்ஜுனை கைது செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News August 10, 2025
திமுக சார்பில் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்டம் முழுவதும் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட சாலவாக்கம் ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் இன்று (10.08.2025) நடைபெற்றது. இதில் எம்எல்ஏ சுந்தர் கலந்துகொண்டு பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
News August 10, 2025
வாரயிறுதி விடுமுறை: காஞ்சிபுரம் மக்களுக்கு குட்-நியூஸ்

சுதந்திர தினத்தையொட்டி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் – செங்கோட்டை, சென்ட்ரல் – போத்தனூர், தாம்பரம் – நாகர்கோயில், மங்களூரு – திருவனந்தபுரம் ஆகிய 4 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. முன்பதிவு தொடங்விட்டதால் உடனே புக் பண்ணுங்க. இந்த விடுமுறையை என்ஜாய் பண்ணுங்க. அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். <<17358989>>தொடர்ச்சி<<>>
News August 10, 2025
எழும்பூர் – செங்கோட்டை சிறப்பு ரயில் 1/3

வரும் 14-ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக செல்லும். 17ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். <<17358984>>தொடர்ச்சி<<>>