News April 13, 2025
காஞ்சிபுரத்தில் உதயமாகும் இரு பிர்காக்கள்

சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்பில், வருவாய் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், காஞ்சிபுரத்தில் புதிதாக இரண்டு பிர்காக்கள் உருவாக்கப்படும் என, தெரிவித்தது. காஞ்சிபுரம் பிர்காவை பிரித்து, செவிலிமேடு மற்றும் விஷ்ணுகாஞ்சி என, இரண்டு பிர்கா உருவாக்க, வருவாய் துறையினர், கருத்துரு அனுப்பியுள்ளது. காஞ்சிபுரம் பிர்காவை பிரிக்க வருவாய் துறையினர் நீண்ட நாட்களாக கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 15, 2025
பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
News April 15, 2025
காஞ்சிபுரம் இட்லியின் சிறப்பு தெரியுமா?

மற்ற இட்லியை விட காஞ்சிபுரம் இட்லி முற்றிலும் வித்தியாசமானது. பல்லவர்கள் காலத்திலிருந்தே காஞ்சிபுரம் கோயில்களில் வழங்கப்பட்ட இந்த இட்லியின் சிறப்பம்சம் இதில் சேர்க்கப்படும் பொருள்களும் அதன் தயாரிப்பு முறையும் தான். நீளமான உருளை வடிவ மூங்கில் அச்சினுள் மந்தாரை இலையைப் பரப்பி, அரிசி, உளுந்து, சீரகம், வெந்தயம், மிளகு போன்ற பொருள்கள் சேர்த்து அரைக்கப்பட்ட மாவை ஊற்றி, வேகவைப்பது தான் காஞ்சிபுரம் இட்லி.
News April 14, 2025
சமத்துவ நாள் விழாவில் ரூ24.80 கோடி நலத்திட்ட உதவிகள்

இன்று (14-4-25)காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான சமத்துவ நாள் விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி 1181 ஆதி திராவிட மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு 24.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் உடன் இருந்தார்.