News January 20, 2026
காஞ்சிபுரத்தில் இருவர் துடிதுடித்து பலி!

ஒரகடம் அடுத்த பண்ருட்டி தோப்புத் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் மகேந்திரன்(19), பாலமுருகன்(19). இவர்கள், தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், நேற்று(ஜன.19 வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு இரவு பைக்கில் இருவரும் வாலஜா நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது, ஒரகடம் அருகே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 14, 2026
காஞ்சிபுரம்: இரவு நேரங்களில் அடூழியம்!

குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சி ராயப்பா நகர் பகுதியில் அடையாறு ஆற்றுக்குச் செல்லும் கால்வாய் உள்ளது. அங்கு இரவு நேரங்களில் மண் திருடப்படுகிறது. இதனால், ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு, கரை உடையும் அபாய நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
News February 14, 2026
குன்றத்தூர் அருகே பயங்கர விபத்து!

காஞ்சிபுரம்; குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்(40). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று(பிப்.13) குடி போதையில் ஆட்டோவை வேகமாக சிவன் தாங்கல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதினார். இதில், படுகாயமடைந்த ராஜேஷை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 14, 2026
காஞ்சிபுரம் அருகே தம்பதி துடித்துடித்து பலி!

சென்னையை அடுத்த பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்(44. இவரது மனைவி கவிதா(42). இருவரும் ராணிப்பேட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஏரிக்கரை அருகே சென்ற போது சென்னையில் இருந்து அதிவேகமாக வந்த கார், இவர்களின் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தம்பதி, படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


