News September 2, 2025

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.,2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 3, 2025

கொந்தளித்த காஞ்சிபுரம் மக்கள்

image

காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் அடிக்கடி தாமதமாவதைக் கண்டித்து, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாலூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக ரயில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News September 3, 2025

காஞ்சிபுரம் வட்டாரத்தில் அதிரடி சோதனை

image

காஞ்சிபுரம், உத்திரமேலூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று RTO அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதியை மீறி அதிக பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனங்கள், தகுதிச் சான்று புதுப்பிக்காதவை, ஓட்டுநர் உரிமம் (ம) அனுமதி சீட்டு இல்லாதவை, வரி செலுத்தாதவை, தார்பாலின் மூடாதவைகள், அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன் உள்ளிட்ட பல்வேறு 152 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.22,07,735 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

News September 3, 2025

காஞ்சியில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

காஞ்சி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!