News February 11, 2026
காஞ்சிபுரத்தில் அதிரடி கைது!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்டத்திற்கு வழங்க இவரது நிலத்தை அளவீடு செய்து தர சர்வெயர் சுந்தர வடிவேலு(46) என்பவரை அணுகினார். அதற்கு சர்வேயர் ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ரசாயன பொடி தடவிய நோட்டுகளை வைத்து கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.
Similar News
News February 16, 2026
காஞ்சிபுரம்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 16, 2026
காஞ்சிபுரம்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

காஞ்சி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 16, 2026
காஞ்சிபுரத்தில் ஹோட்டல் தொடங்க ரூ.50,000!

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.


