News January 22, 2026

காஞ்சிபுரத்தில் அதிகரிக்கும் சிக்குன்குனியா பாதிப்பு!

image

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிக்கன் குனியா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு மாநில பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு, சிக்கன் குனியா நோய்க்கு தனி வார்டுகள் அமைப்பது, முன்கூட்டியே பரிசோதனைகள், நடமாடும் மருத்துவக்குழு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News February 6, 2026

காஞ்சிபுரத்தில் அரசு வழங்கும் இலவச வீடு! DONT MISS

image

காஞ்சிபுரம் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு<<>> க்ளிக் செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE!

News February 6, 2026

காஞ்சிபுரத்தில் பயங்கர தகராறு!

image

மாங்காடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 16ஆவது மாடியில் வசித்து வருபவர் ஈஸ்வரி. இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மேல் தளத்தில் வசித்து வரும் கோபிநாத், சைதன்யா, நிர்மல், பிரியங்கா ஆகியோர் இரவு நேரங்களில் சத்தம் போடுவதாகக் கூறப்படுகிறது. இதில், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News February 6, 2026

காஞ்சிபுரத்தில் நாளை பவர் கட்!

image

பழையசீவரம் துணை மின் நிலையத்தில் நாளை(பிப்.7) காலை 9 மணி முதல் பிற்பகம் 3 மணி வரை மதூர், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூர், பாலூர், மேலச்சேரி, உள்ளாவூர், பழைய சீவரம், சங்கராபுரம், வாலாஜாபாத், புளியம்பாக்கம், கிதிரிபேட்டை, புத்தகரம், கீழ் ஒட்டிவாக்கம், ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன் பேட்டை, அருங்கம்பாக்கம், அவளூர் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!