News January 21, 2026
காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து 35 இடங்களில் திருட்டு!

காஞ்சிபுரம் அருகே 35 இடங்களில் மின் மாற்றிகளின் உதிரிபாகங்கள் மற்றும் எண்ணெயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் ஆழ்துளை கிணற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் போலீசில் புகாரளித்துள்ளனர். எப்.ஐ.ஆர் பதிவு செய்தபின், புதிய மின் மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 29, 2026
ஸ்ரீபெரும்புதூரில் துடிதுடித்து பலி!

காஞ்சிபுரம்: மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சதேக்(30). இவர், கட்டடத் தொழிலாளியாக பணி புரிந்தார். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஓர் கட்டடம் இடிக்கும் பணியில் நேற்று(ஜன.28) ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமான ஓர் சுவர் சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்த அவரை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது, ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
News January 29, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.28) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.