News December 18, 2025

காஞ்சிபுரத்தில் அஞ்சல் சேவை குறைதீர் முகாம்

image

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் இயங்கி வரும் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில், வரும் 22ஆம் தேதி காலை 10:00 மணிக்கு அஞ்சல் சேவை குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. அஞ்சல் சேவை தொடர்பான புகார்கள் உள்ளவர்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மனுக்கள் அளிக்கலாம். தனியார் கூரியர் மூலம் வரும் புகார்கள் ஏற்கப்படமாட்டாது என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

Similar News

News December 20, 2025

காஞ்சிபுரத்தில் சூப்பர்வைசர் வேலை!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., நமது ஊரில் அமைந்துள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தில் காலியாக உள்ள சூப்பர்வைசர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு +2 படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News December 20, 2025

காஞ்சிபுரத்தில் தெரிய வேண்டிய இணையங்கள்!

image

1) மாவட்டம் சார்ந்த அறிவிப்புகள், வேலைகள், விவரங்களுக்கு : https://kancheepuram.nic.in/ta/
2) மாவட்ட நீதிமன்றம் சார்ந்த சேவைகளுக்கு:
https://kanchipuram.dcourts.gov.in/ta/
3) காஞ்சிபுரம் காப்பரேஷன்: https://www.tnurbantree.tn.gov.in/kancheepuram/
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News December 20, 2025

காஞ்சி: ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு!

image

ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டு கோட்டை சிப்காட் பகுதியில் வாஷிங் மெசினுக்கு தேவைப்படும் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. அங்கு சிலர், ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள உதிரி பாகங்களை திருடி செல்வதாக நிர்வாகம் சார்பில் போலீசாரிடம் புகார் அளித்தனர். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்ததில் அதே தொழிற் சாலையைச் சேர்ந்த பாலாஜி (29) , சபேசன் (25) ஆகியோரை கைது செய்தனர்.

error: Content is protected !!