News February 2, 2025

காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

காசி தமிழ்ச்சங்கம் 3ஆம் ஆண்டு விழா, வரும் பிப்.15ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வரும் மக்கள் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் – பனாரஸ் இடையே (06193) வரும் பிப்.13ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், பனாரஸில் இருந்து சென்னைக்கு (06194) பிப்.19ஆம் தேதி இயக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

Similar News

News March 6, 2026

சென்னையில் 2 சிறுவர்கள் துடிதுடித்து பலி

image

அயனாவரம் பகுதியைச் சேர்ந்தோர் சஞ்சய்(12). அவரது நண்பர் பிரவீன்(12). இவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ரயில்வேக்கு சொந்தமான ஏரியில் குளிக்க சென்றுள்ளார். ஏரியின் ஆழத்தில் சென்றதால் சேற்றுக்குள் சிக்கி துடிதுடித்து உயிரிழந்தனர். போலீசார் உடலை மீட்டு, கீழ்ப்பாக்க அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து, போலீசார் வழக்கு பதித்து விசாரித்து வருகின்றனர்.

News March 6, 2026

இசை நிகழ்ச்சி காரணமாக நள்ளிரவு வரை மெட்ரோ சேவை

image

சென்னையில் நடைபெறும் ஹிப்ஹாப் ஆதி இசை நிகழ்ச்சியை முன்னிட்டு, நாளை 7ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நந்தனம் – விம்கோ நகர் மற்றும் நந்தனம் – விமான நிலையம் வழித்தடங்களில் ரயில்கள் நள்ளிரவு வரை இயக்கப்படும். ஹிப்ஹாப் தமிழா இசை நிகழ்ச்சிக்கான ஸ்பான்சர் பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் இலவசமாக மெட்ரோவில் பயணம் செய்யலாம் என்ற தெரிவித்துள்ளது

News March 6, 2026

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட பாமக தலைவர் மனு தாக்கல்

image

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 05), அதிமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட பாமகவுக்கு ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.இதில், பாமக சார்பில் போட்டியிட,பாமக தலைவர் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில், அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!