News November 22, 2025

காசி தமிழ் சங்கத்துக்கு செல்ல 7 சிறப்பு ரயில்கள்

image

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியை ஒட்டி தமிழகத்தில் இருந்து, உ.பி., பனாரஸுக்கு 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் கன்னியாகுமரி (நவ.29,7 ;11.45 AM), சென்னை (டிச., 2, 6,12; 4.15 AM), கோவையில் (டிச., 3,9; 11.15 AM) இருந்து பனாரஸுக்கு செல்கின்றன. இந்த சிறப்பு ரயில்களின் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கும்.

Similar News

News February 2, 2026

இறந்தவர் மீண்டும் உயிருடன் வந்தார்.. TWIST

image

2019-ல் இறந்தவர் இப்போது போலீஸில் புகார் அளித்திருக்கிறார். என்ன, குழப்பமாக இருக்கிறதா? சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சுசீலா(71) இறந்துவிட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழை பெற்ற அவரது மகன் அல்போன்ஸ் ராஜ், தாயின் சொத்துக்களை ₹34 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இந்த விவரம் தற்போதுதான் சுசீலாவிற்கு தெரியவந்துள்ளது. அவர் அளித்த புகாரின்பேரில் அல்போன்ஸ் ராஜை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.

News February 2, 2026

MGR உடன் விஜய்யை ஒப்பிட வேண்டாம்: TKS

image

திமுகவில் இருந்து பிரிந்து சென்ற MGR உடன் விஜய்யை ஒப்பிடுவது பைத்தியக்காரத்தனம் என்று திமுக செய்தித் தொடர்பாளர் TKS இளங்கோவன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், MGR படங்களில் கொள்கை சார்ந்த கருத்துகள் இருக்கும். அவரோடு விஜய் தன்னை ஒப்பிட்டுக்கொள்வது அதீத கற்பனை எனவும், தங்கள் கொள்கை குறித்து பேசாமல் திமுகவை திட்டுவதையே கொள்கையாக அவர் வைத்துள்ளதாகவு தெரிவித்துள்ளார்.

News February 2, 2026

H.ராஜாவின் உடல்நலம் எப்படி இருக்கிறது?

image

மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் H.ராஜாவுக்கு, சென்னை அப்போலோவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று CM ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில், இன்று வானதி சீனிவாசனும் அவரை சந்தித்துள்ளார். அவர் விரைவாக உடல்நலம் தேறி வருவதாக SM-ல் பதிவிட்டுள்ள வானதி, மீண்டும் களத்திற்கு அவர் திரும்ப வர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!