News April 27, 2024

காசியின் கூட்டாளி கைது

image

கன்னியாகுமரி மாவட்டம் கணேசப்புரத்தை சேர்ந்த நாகர்கோவில் காசி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காசிக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த ராஜேஷ்சிங் என்பவர் துபாயில் ஓட்டுனராக வேலை பார்த்து தலை மறைவாக இருந்தார். இந்நிலையில் சென்னை திரும்பிய ராஜேஷ்சிங்கை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News August 23, 2025

மாணவி பாலியல் வன்முறை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

image

அருமநல்லூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (56) கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை பல முறை பாலியல் வன்முறை செய்துள்ளார். இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் பதிவு செய்த வழக்கு நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா நேற்று சிவகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.

News August 22, 2025

குமரி: வீட்டிலிருந்தே பட்டா பெறலாம்

image

கன்னியாகுமரி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை இனி எளிமையாக பெறலாம். அதற்கு eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 22, 2025

குமரியில் கொலை; பகீர் வாக்கு மூலம்

image

மேக்கா மண்டபம் சந்தையில் மணி என்பவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கொற்றிக்கோடு போலீசார் மேசாக் என்பவரைகைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் மணி வைத்திருந்த மது பாட்டில்களை காணவில்லை அவர் என்னை சந்தேகப்பட்டு எழுப்பி கேட்டார். இதில் ஏற்பட்ட தகறாலில் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!