News December 31, 2025

காங்., தலைவரிடம் கூறிவிட்டேன்: ப.சிதம்பரம்

image

தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணி வலியமையாக உள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் பேட்டியளித்த அவர், தமிழகத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்; இங்கு திமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்று காங்கிரஸ் தலைவரிடம் கூறிவிட்டதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் ஒரு சில இடங்கள் கடினமானதாக இருந்தாலும், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக கூட்டணி எளிதில் வெற்றிபெறும் என்றும் அவர் கூறினார்.

Similar News

News January 24, 2026

சற்றுமுன்: விஜய் மாற்றினார்

image

தவெகவுக்கு விசில் சின்னம் கிடைத்தது முதலே அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில், விஜய்யின் X பக்க கவர் போட்டோ மாற்றப்பட்டுள்ளது. அதில் விசில் சின்னம் இடம்பெற்றது மட்டுமல்லாது ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற வார்த்தைகளில் வழக்கமான சிவப்பு, மஞ்சள் நிறங்களுடன் மேலும் சில நிறங்களும் இடம்பெற்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது. எதற்காக இவை பயன்படுத்தப்பட்டன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

News January 24, 2026

வெறும் ₹1000-ல் குழந்தையின் Future-ஐ பாதுகாக்கும் திட்டம்!

image

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை காக்க மாதம் ₹1000-ஐ NPS வாத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 ஆண்டுகள் முதலீடு செய்யும் பட்சத்தில், வட்டி எல்லாம் சேர்த்து மொத்த தொகை ₹8,48,000-ஆக இருக்கும். உங்கள் குழந்தைக்கு 18 வயதான பிறகு 80% தொகையை எடுத்து அவர்களின் படிப்பு செலவுக்கு பயன்படுத்தலாம். eNPS portal-க்கு சென்று திட்டத்தில் சேருங்கள். எல்லாருக்கும் பயன்படும், SHARE THIS.

News January 24, 2026

BREAKING: இந்தியா பவுலிங்

image

ஜிம்பாப்வேயில் நடக்கும் U-19 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஏற்கெனவே, அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், வங்கதேசத்தை 18 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி இந்தியா சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இந்நிலையில், நியூசிலாந்தையும் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெறும் முனைப்பில் இந்தியா உள்ளது.

error: Content is protected !!