News January 21, 2026
காங்., செயற்குழு கூட்டத்தில் MP-க்கள் பங்கேற்காதது ஏன்?

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இதில், ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணசாமி, மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த் உள்ளிட்ட 7 MP-க்கள் பங்கேற்கவில்லை. இதனால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அவர்கள் டெல்லியில் இருப்பதால் பங்கேற்க முடியவில்லை என்று தமிழக பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறினார்.
Similar News
News January 28, 2026
தங்கம், வெள்ளி.. விலை ₹35,000 மாறியது

<<18982860>>தங்கம் விலை<<>> கிடுகிடுவென உயர்ந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில், வெள்ளி விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் 1 கிலோ வெள்ளி ₹35,000 உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது, வெள்ளி 1 கிராம் ₹400-க்கும், 1 கிலோ ₹4 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2026 ஜன.1-ல் வெள்ளி 1 கிலோ ₹2.56 லட்சத்திற்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
News January 28, 2026
டிகிரி போதும்.. ₹48,480 சம்பளம்

யூகோ வங்கியில் 173 Generalist and Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA முடித்திருக்க வேண்டும் *20- 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் *எழுத்துத் தேர்வு, குழு விவாதம் & Screening மூலம் தேர்ச்சி நடைபெறும் *₹48,480 – ₹93,960 வரை சம்பளம் *வரும் பிப்ரவரி 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் *விண்ணப்பிக்க <
News January 28, 2026
CINEMA 360°: ரீ-ரிலீஸிலும் ‘மங்கத்தா’ ₹17.5 கோடி

*திருப்பதி கோயிலில் நடிகர் தனுஷ் மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார். *சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ படம் 16 ஆண்டுகள் கழித்து ரீ- ரிலீஸ் செய்யப்படுகிறது. *ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட அஜித்தின் ‘மங்கத்தா’ படம் 5 நாட்களில் ₹17.5 கோடி வசூலித்துள்ளது.*அஸ்வத் மாரிமுத்து இயக்கும் சிம்புவின் ‘காட் ஆப் லவ்’ படத்தில் நடிகை மிருணாள் தாக்கூர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


