News February 4, 2026
காங்., உடன் தொகுதிகள் பற்றி பேசவில்லை: கனிமொழி

காங்., உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்த கனிமொழி, தொகுதிகள் பற்றி இதுவரை பேசவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், குழுவில் இருப்பவர்களே கூட்டணி & தொகுதிப் பங்கீடு உள்பட மற்ற விஷயங்களை பேசுவார்கள் என்றும் கூறியுள்ளார். சமீபமாக திமுக – காங்., கூட்டணியில் புகைச்சல் உண்டான நிலையில், இரு கட்சியினர் தரப்பிலும் கூட்டணி தொடர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Similar News
News February 16, 2026
திமுக ஆட்சியில் தினுசு தினுசான குற்றங்கள்: நயினார்

<<19157241>>ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிபதி <<>>மீது அரிவாள் வீசப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக நயினார் தெரிவித்துள்ளார். திறனற்ற திமுக ஆட்சியில் நடக்கும் தினுசு தினுசான குற்றங்களால் தமிழக மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளதாக அவர் சாடியுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கை சரியாக கையாளாத திமுக அரசை தப்பித்தவறி கூட மீண்டுமொருமுறை தமிழக மக்கள் ஆட்சியில் அமர்த்தமாட்டார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
News February 16, 2026
தமிழ்நாட்டின் தேர்தல் தேதி எப்போது?.. முக்கிய அப்டேட்

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.23-ம் தேதி வெளியாகும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்திருக்கிறார். இதனையடுத்து, வரும் 26-ல் <<19152692>>CEC ஞானேஷ் குமார்<<>> தமிழகம் வந்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பிறகு, இம்மாத இறுதியில் (அ) மார்ச் தொடக்கத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை ECI அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெடியா இருங்க வாக்காளர்களே!
News February 16, 2026
மாத மாதம் ₹10,000 பென்ஷன் வேண்டுமா?

வயதான பிறகு உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்ஷன் அவசியமாகிறது. இதற்கு ஏதுவாக, மாதம் ₹10,000 வரை பென்ஷன் வழங்குகிறது வய வந்தனா ஓய்வூதியத் திட்டம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். ₹1.5 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை முதலீடு செய்தால், மாதம் ₹1,000 முதல் ₹10,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கே <


