News February 24, 2026
காங்கேயம் அருகே விபத்து! சம்பவயிடத்திலேயே பலி

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அடுத்த டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவர் நேற்று காலை அவரது பேட்டரி மொபட்டில் காங்கேயம் நோக்கி சென்றுள்ளார். அப்போது நாட்டார்பாளையம் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் மொபட்டை ஓட்டி சென்ற முதியவர் குமாரசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News March 5, 2026
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சசிகுமார், பசுபதி ஆகியோரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 6-ம் தேதி(வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வேலை தேடுவோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.