News December 26, 2025
காங்கேயம் அருகே சோகம்: தம்பதி தற்கொலை!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ளது நத்தக்காடையூர். இங்குள்ள வெள்ளியம்பாளையம் பகுதியில் நேற்று இரவு சுமார் 80 வயது மதிக்கத்தக்க வயதான கணவன் மற்றும் மனைவி ஆகியோர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காங்கேயம் போலீசார், இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
சிறப்பு ரயில் இயக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் வழியாக வருகின்ற 29-ம் தேதி கோவையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதேபோல டிச. 30-ம் தேதி ராமேஸ்வரத்துக்கு கோவைக்கு இந்த ரயில் இயக்கப்படுவதால் ராமேஸ்வரம் செல்லும் உடுமலைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள உடுமலை ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 27, 2025
திருப்பூர்: ரூ.5 லட்சம் காப்பீடு விண்ணப்பிப்பது எப்படி?

திருப்பூர்: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும்.
News December 27, 2025
திருப்பூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.


