News September 6, 2025
காங்கிரஸ் மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் அழைப்பு

நாளை செப்.7-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் ஆணையம், பி.ஜே.பி அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகையின் தலைமையில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு திருச்சி மாநகர் காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாநில தலைவரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News September 6, 2025
திருச்சி: கோழிப்பண்ணை அமைக்க 50% மானியம்

திருச்சி, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 6, 2025
திருச்சி: ITI, டிப்ளமோ போதும்.. சூப்பர் வாய்ப்பு

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள் <
News September 6, 2025
பராமரிப்பு பணிகளால் குடிநீர் வினியோகம் ஒரு நாள் நிறுத்தம்

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளதால் ஒரு சில இடங்களில் குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். அதன்படி கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, பொது தரைமட்ட நீர் தேக்க தொட்டி ஆகிய நீரேற்ற நிலையங்களில் இருந்து குடிநீர் செல்லும் இடங்களான கே.கே நகர் பகுதிகள், அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை ஒரு நாள் குடிநீர் வினியோகம் இருக்காது.