News March 22, 2024

காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம்

image

ராமநாதபுரம் மாவட்ட காங் கமிட்டி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. கருமாணிக்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டி முன்னிலை வகித்தார். திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வாக்கு சேகரித்து பேசினார். மாவட்ட காங் பொறுப்பாளர்கள் செல்லத்துரை அப்துல்லா, ராஜாராம் பாண்டியன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி பேசினர்.

Similar News

News February 3, 2026

ராம்நாடு : விபத்தில் ஒருவர் உடல் நசுங்கி பலி!

image

இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அரசு மருத்துவமனை அருகே நேற்று அதிகாலை கோர விபத்து நிகழ்ந்தது. அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் மீட்கப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை.

News February 3, 2026

இராமநாதபுரத்தில் ரூ. 2 கோடி கஞ்சா சிக்கியது எப்படி?

image

ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியில் Q பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையில், இலங்கைக்கு கடத்த முயன்ற 194 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து கார் மூலம் கொண்டு வரப்பட்ட இதன் மதிப்பு ரூ. 2 கோடியாகும். இதுதொடர்பாக கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டார். ராமேஸ்வரம் வழியாக இதை கடத்த திட்டமிட்டது விசாரணையில் அம்பலமானது. தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

News February 2, 2026

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று (பிப்.02) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!