News October 21, 2025
காங்கிரஸ் எம்எல்ஏ சொந்தம் கொண்டாடுவது வேடிக்கை – பாஜக

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய நிதியமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர், தொலைத் தொடர்பு துறை அமைச்சருடன் தொடர்பு கொண்டு குமரி மீனவர்களின் சேட்டிலைட் போன் ரீசார்ஜ் வசதியை செய்து கொடுத்துள்ளார். இதில் எதிலும் சம்பந்தம் இல்லாத ராஜேஷ்குமார் எம்எல்ஏ தனது முயற்சியால் நடந்ததாக சொந்தம் கொண்டாட நினைப்பது வேடிக்கையாக உள்ளது என குமரி பாஜக தலைவர் கோபகுமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 20, 2025
மீனவர்களுடன் சேட்டிலைட் போனில் பேசிய ஆட்சியர்

ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள் தொலைபேசிகளை ரீசார்ஜ் செய்ய அரசு அனுமதி வழங்கியதையடுத்து இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, ராஜேஷ்குமார் எம்எல்ஏ வள்ளவிளை பங்கு தந்தை , மீனவர் குடும்பத்தினரை வள்ளவிளையில் நேரில் சந்தித்து செயற்கைக்கோள் தொலைபேசி ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளதை அவர்களுடன் பேசி உறுதி செய்தனர்.
News October 20, 2025
வெள்ளிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா அறிவிப்பு

வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை மறுநாள்(அக்.22) கொடியேற்றத்துடன் தொடங்கி அக்.27 வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் முதல் நாள் காப்பு கட்டு நிகழ்ச்சியும், கொடியேற்றமும் நடக்கிறது. அக்.27 அன்று மாலை 6:15 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு சாமி மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும்
News October 20, 2025
குமரி மக்களே இனி அலைச்சல் இல்லை.!

குமரி மக்களே, உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டும். நீங்கள் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். உடனே இத்தகவலை SHARE பண்ணுங்க!