News February 11, 2026

காங்கிரஸ் அநாதையாக நிற்கும்: குஷ்பு

image

வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து அநாதையாக விடப்படும் என குஷ்பு கூறியுள்ளார். <<19109470>>திமுக – காங்கிரஸ்<<>> இடையேயான சலசலப்பு பற்றி கருத்து தெரிவித்த அவர், இந்த பிரச்னைக்கு அவர்கள் டெல்லி சென்று வந்தாலும் தீர்வு கிடைக்காது என்றார். மேலும், தமிழகம் முழுவதும் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதால், நிச்சயம் இம்முறை NDA கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்றும் கூறினார். உங்கள் கருத்து என்ன?

Similar News

News February 17, 2026

சம்பளம் உயர்ந்தது.. அனைத்து ஊழியர்களுக்கும் ஜாக்பாட்

image

கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020, ஜன.1 – 2021, டிச.31 வரையிலான அகவிலைப்படி உயர்வு (58%) தற்போது மீண்டும் வழங்கப்பட்டு வருவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், ஈட்டிய விடுப்பை (Earned Leave) ஒப்படைத்து பணமாக பெற்றுக்கொள்ளும் நடைமுறையும் மீண்டும் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 17, 2026

குடும்பத்துடன் இந்தியாவுக்கு வாருங்கள்.. PM மோடி அழைப்பு!

image

வங்கதேசத்தின் புதிய PM-ஆக பதவி ஏற்றுக்கொண்ட தாரிக் ரஹ்மானுக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குடும்பத்துடன் இந்தியாவுக்கு வருகை தருமாறு தாரிக்குக்கு அழைப்பு விடுத்துள்ள மோடி, இருநாட்டின் உறவுகளை வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், வர்த்தகம், தொழில்நுட்பம், கல்வி, திறன் மேம்பாடு, எரிசக்தி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்றவும் கோரியுள்ளார்.

News February 17, 2026

இந்த வீழ்ச்சி அங்கிருந்துதான் தொடங்கியதா?

image

2023 ODI WC-ஐ வென்ற பிறகு, மிட்செல் மார்ஷ் கோப்பையின் மீது கால் வைத்து போஸ் கொடுத்தார். அதன்பிறகு, ஆஸி., அணி கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 2024 T20 WC, 2025 CT, WTC, 27 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் டெஸ்ட், பாக்., இலங்கை & தெ.ஆ., அணிகளுடனான ODI தொடர் என அனைத்திலும் தோல்விகளை சந்தித்தது. தற்போது T20 WC-ல் ஜிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்துள்ளது.

error: Content is protected !!