News February 8, 2026

காங்கிரஸுக்கு செக் வைக்கும் திமுக ரிப்போர்ட்

image

காங்., 41 சீட்களை கேட்பதாக தகவல் வெளியான நிலையில், 1 MP-க்கு 3 MLA சீட்கள் வீதம் 27 சீட்கள் கொடுக்க திமுக முன்வந்துள்ளதாம். இந்த எண்ணிக்கையை தாண்டி பேச்சுவார்த்தை சென்றால், தனது சர்வே ரிப்போர்ட்டை காண்பிக்கவும் திமுக தயாராகவுள்ளதாம். அந்த ரிப்போர்ட்டில் 12 காங்., MLA-க்களின் செயல்பாடு சரியாக இல்லை என்றும், அவர்கள் மீண்டும் களமிறங்கினால் NDA கூட்டணியே வெல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

Similar News

News February 16, 2026

PAN கார்டு தொலைஞ்சிடுச்சா? நம்பர் அறியும் ஈசி வழி

image

பான் கார்டு தொலைந்து விட்டதா? நம்பரும் தெரியாதா? பதட்டம் வேண்டாம். இந்த எளிய வழியின் மூலம் பான் கார்டு நம்பரை தெரிந்து கொள்ளலாம் ➨Income Tax E-Filing போர்ட்டலுக்கு செல்லுங்கள் ➨Know Your PAN-ஐ கிளிக் செய்யுங்கள் ➨அதில் Quick Links பக்கத்திற்கு செல்லுங்கள் ➨பெயர், பிறந்த தேதி, பதிவு செய்த மொபைல் நம்பரை டைப் செய்யவும் ➨OTP கொடுத்து Verify செய்தவுடன், SMS-ல் உங்களின் PAN நம்பர் வரும். SHARE IT.

News February 16, 2026

ELECTION: விலகுவதாக அறிவிப்பு.. காங்கிரஸ் அதிர்ச்சி

image

அசாம் மாநில காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும், EX மாநிலத் தலைவருமான பூபேன் குமார் போரா, கட்சியிலிருந்து விலகுவதாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது, தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. 2 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது காங்கிரஸுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 2021 – 25 வரை காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த போரா, பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியாக திகழ்ந்தவர்.

News February 16, 2026

விஜய்-த்ரிஷா சர்ச்சை.. விளக்கமளித்துள்ளார் நயினார்

image

விஜய் – த்ரிஷாவை சேர்த்துவைத்து நயினார் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய கருத்துக்கு பதிலளித்த அவர், தான் யார் மனதையும் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்பவன் அல்ல என கூறியுள்ளார். அதேநேரத்தில் அப்படி கூறியதற்கு அவர் தற்போதும் மன்னிப்பு கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!