News January 10, 2026

காங்கிரஸின் 3வது பிளான்.. கார்த்தி சிதம்பரம் Open Talk

image

தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருக்கிறதா என கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அரசியலில் என்னென்ன ஆப்ஷன்ஸ் இருக்கிறது என்ற சிந்தனை இருக்கத்தானே செய்யும் என்றார். மேலும், திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக 3வது செயல்திட்டம், அதிகார ஆசை, விரிவாக்கப்பட்ட சிந்தனை இருக்கக்கூடாதா என கேட்ட அவர், அதுபோன்ற சிந்தனைகள் இருந்தால்தான் நல்லது என கூறி உண்மையை உடைத்தார்.

Similar News

News February 7, 2026

சட்டமன்ற தேர்தலில் சீமானுக்கு வந்த புதிய சிக்கல்

image

பேரவை தேர்தலுக்காக NTK விவசாயி சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பரப்புரை செய்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவை சேர்ந்த இந்திய குடியரசு கட்சிக்கு(அத்வாலே) 2021-ல் நாதக போட்டியிட்ட ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை ECI ஒதுக்கியுள்ளது. இதனால், ‘ஏர் கலப்பை விவசாயி’ சின்னத்தில் களமிறங்கும் வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2 சின்னங்களும் ஒரேமாதிரி உள்ளதால் மக்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

News February 7, 2026

திங்கள் முதல் தொடங்கும் செய்முறைத் தேர்வுகள்!

image

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்.9 முதல் தொடங்குகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 9 – 11 மணி, காலை 11.30 – மதியம் 1.30 மணி, மதியம் 2.30 – மாலை 4.30 மணி என 3 பிரிவுகளாக செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ALL THE BEST மாணவர்களே, கலக்குங்க!

News February 7, 2026

8 குழந்தைகள் உள்பட 24 பேரை கொன்ற கிளர்ச்சி படை!

image

சூடான் உள்நாட்டு போரால் இடம்பெயர்ந்த மக்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது RSF என்ற கிளர்ச்சி படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில், 8 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்த குழந்தைகளில் 2 பச்சிளம் குழந்தைகள் என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை உறுதி செய்துள்ள சூடான் டாக்டர்கள் குழு, மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி சர்வதேச அமைப்புகளுக்கு வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!