News January 17, 2026

காங்கயம்: 6 வயது சிறுவன் உயிரிழப்பு

image

ஈரோட்டை சேர்ந்த லோகநாதன், காங்கயம் நாட்டார்பாளையத்தில் தங்கித் தேங்காய் களத்தில் வேலை செய்து வருகிறார். இவரது 6 வயது மகன் அஸ்வித், கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. காங்கயம் GHக்குக் கொண்டு சென்றும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 31, 2026

திருப்பூரில் மாணவர் பலி: டிரைவருக்கு 7 ஆண்டு சிறை

image

திருப்பூரில் கடந்த 2022-ல் கறிக்கோழி லாரி மோதி பொள்ளாச்சி கல்லூரி மாணவர் ஆரியன் உயிரிழந்த வழக்கில், திருப்பூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக, லாரி டிரைவர் ராஜ்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பத்மா உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் விவேகானந்தம் ஆஜரானார்.

News January 31, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

image

வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு நாளை முன்னிட்டு, பிப்ரவரி 1-ம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபான விடுதிகளை நாள் முழுவதும் அடைக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் மனிஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News January 31, 2026

திருப்பூர் இரவு நேரம் ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 30.01.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

error: Content is protected !!