News April 23, 2025
கஷ்டங்கள் தீர்க்கும் காட்டுவீர ஆஞ்சநேயர்

கிருஷ்ணகிரி தேவசமுத்திரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்ததாலும் இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்ததாலும் மூலவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறார். ஒருவர் முழுத்தேங்காயை மனதார வேண்டி அனுமனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினால் அவருடைய கோரிக்கைகள் 3 மாதங்களுக்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
Similar News
News August 5, 2025
கிருஷ்ணகிரி: 10th போதும்… ரயில்வேயில் வேலை ரெடி

கொங்கன் ரயில்வேயில் உள்ள 28 கீமேன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீமேன் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்த 18 – 28 வயது உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,500 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் <
News August 5, 2025
கிருஷ்ணகிரி மக்களே மிஸ் பண்ணிடாதீங்க

கிருஷ்ணகிரியில் இன்று (ஆக.05) பல்வேறு இடங்களில் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற உள்ளது. அதன்படி ஓசூர் மாநகராட்சி, ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், பர்கூர், சூளகிரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மகளிர் உரிமை தொகையில் விடுபட்டவர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 பெற விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
News August 5, 2025
மத்திய அமைச்சரை சந்தித்த கிருஷ்ணகிரி எம்.பி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று (ஆக.04) கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபிநாத் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை நேரில் சந்தித்து ஓசூரில் விமானம் கட்டும் பணிகளை விரைவுபடுத்துமாறு கோரிக்கை மனு அளித்தார்.