News December 16, 2025
கவுந்தப்பாடி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

கவுந்தப்பாடி அடுத்த பழனிசாமி கவுண்டர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரியை, விற்பனை செய்வதாக கவுந்தப்பாடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், போலியாக வெள்ளைத் தாளில் அச்சிடப்பட்ட எங்களை கொண்டு லாட்டரி என விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 17, 2025
ஈரோட்டில் நாளை மாற்றம்!

ஈரோடு மாவட்டம் 18-12-2025 அன்று பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் அருகில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளதால், ஈரோடு மாவட்டத்திற்குள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த சாலை போன்ற விபரங்களை மேலே உள்ள காவல்துறை அறிக்கையில் பார்க்கவும்.
News December 17, 2025
ஈரோட்டில் தவெகவினருக்கு கடும் கட்டுப்பாடு!

ஈரோடு மாவட்டத்தில், தவெக சார்பில் நாளை 18-12-2025 மக்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கட்சி தொண்டர்கள் கடைபிடிக்க வேண்டிய 11 வழிகாட்டு நெரிமுறைகளை இன்று, அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். இதில், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி சிறுவர்கள் பங்கேற்க வேண்டாம் என்பன உட்பட ஏராளமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
News December 17, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


