News December 14, 2025

கவியே அழகே ஷில்பா மஞ்சுநாத்

image

‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷில்பா மஞ்சுநாத், இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில், அவரது அடி நெஞ்சை கொல்லும் பார்வை, நிலவே, மலரே, கவியே, அழகே என வார்த்தைகளை வழிந்தோட செய்கிறது. மனதோ கொஞ்சிப் பேச துடிக்கிறது. இந்த போட்டோக்கள் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

Similar News

News March 2, 2026

புதிய சாதனை படைத்த இந்திய அணி

image

WI-க்கு எதிராக <<19275716>>196 ரன்கள் சேஸிங்<<>> செய்ததன் மூலம், டி20 WC வரலாற்றில் தனது அதிகபட்ச ரன் சேஸிங்கை இந்தியா பதிவு செய்துள்ளது. அத்துடன், டி20 WC வரலாற்றில் இது 3-வது அதிகபட்ச ரன் சேஸிங் ஆகும். அதேபோல, டி20 WC தொடர்களில் அதிக முறை அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணி என்ற சாதனையை பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த 3 அணிகளும் 6 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

News March 2, 2026

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த UAE

image

UAE-ன் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு, அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் நடவடிக்கையின் மூலம் வளைகுடா நாடுகளில் இருந்து ஈரான் தங்களை ஒதுக்கிக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இனி ஈரான் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், இத்தருணத்தில் தங்களது போர் நட்பு நாடுகளுடன் கிடையாது என்பதை ஈரான் புரிந்துகொள்வது அவசியம் என்று தெரிவித்தார்.

News March 2, 2026

UAE மீதான தாக்குதலுக்கு PM மோடி கண்டனம்

image

UAE மீது ஈரான் டிரோன் தாக்குதலை தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமதுடன் PM மோடி உரையாடியுள்ளார். இந்த கடினமான நேரத்தில் UAE உடன் இந்தியா துணை நிற்கும் என்றும், தாக்குதலில் இறந்தவர்களுக்கு தனது இரங்கல்கள் எனவும் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள அவர், UAE-ல் உள்ள இந்தியர்களை பத்திரமாக காப்பதற்காக ஷேக் முகமதுக்கு நன்றியும் கூறியுள்ளார்.

error: Content is protected !!