News July 6, 2025

கவியருவி இன்று முதல் திறப்பு

image

ஆனைமலை அருகே கவியருவி, சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் அங்கு செல்லவும், தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் கடந்த ஒரு மாதமாக கவியருவிக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், தொடர்ந்து கவி அருவி மூடப்பட்டிருந்தது. தற்பொழுது கவியருவிக்கு நீர்வரத்து குறைந்ததால், இன்று முதல் கவியருவி திறக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 22, 2025

டிப்ளமோ துணை கலந்தாய்வுக்கு மீண்டும் விண்ணப்பம்

image

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில், பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் https://tnau.ucanapply.com இணையதளத்தின் மூலமாக துணை இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

News August 22, 2025

கோவையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-2200009 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

News August 22, 2025

அறிவித்தார் கோவை கலெக்டர்!

image

கோவை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) கோயம்புத்தூர் – பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 270-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் , 8 மற்றும் 10-ம் வகுப்பு,ஐடிஐ, இன்ஜினியரிங்,டிகிரி, செவிலியர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார். SHAREIT

error: Content is protected !!